Perambalur: Bus catches fire while Ayyappa devotees are cooking!
பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் சபரிமலை சென்று விட்டு ஆந்திரா செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் பஸ்சை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கரடி முனீஸ்வரர் கோயில் அருகில் ஓரங்கட்டினர். அங்கு சாப்பிடுவதற்காக சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆம்னி பஸ்சில் தீப்பற்றியது. அது மளமளவென வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மீட்டு படையினர் விரைந்து சென்றனர். அதற்குள் பாதிக்கும் மேற்பட்ட பஸ் எரிந்து தீக்கீரையானது. தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சுற்றுலா ஆம்னி பஸ் தீவிபத்தில் அதிர்ஷ்ட்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. ஐயப்ப பக்தர்களுக்கு மாற்று பேருந்து மூலம் ஆந்திரா செல்கின்றனர்.