Perambalur: Certifying ceremony for trained students at Sri Swami Excellence Academy!
பெரம்பலூர் கனரா வங்கி அருகே இயங்கி வரும் சுவாமி எலக்ரிட்கல்ஸ் நிறுவனம், ஐடிஐ மற்றும் மாணவர்கள் திறன் மேம்பாட்டிற்காக ஸ்ரீசுவாமி எக்ஸ்லன்ஸ் அகாடமியை நடத்தி வருகிறது.
இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசு தட்டச்சு தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு பஸ்ட் கிளாஸ் வித் டிஸ்டன்ஸ் தேர்ச்சி பெற்றனர். அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா ஸ்ரீசுவாமி இன்ஸ்டியூட் துணைத் தாளாளர் செல்வராணி தலைமையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. டைப்ரைட்டிங் தமிழ் ஆங்கிலம் கணினி பாடப்பிரிவுகள் அடிப்படை கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜாவா, டாலி, பைத்தான், ஹச்.டி.எம்.எல், வெப் டிசைன் டாட்.நெட், சி. சி++, எம்.எஸ் ஆபீஸ் போன்ற அனைத்து பாடப்பிரிவுகளில் பயிற்சியை நிறைவுபெற்ற மாணவர்களுக்கும், தையல் பயிற்சி, ஆரிய ஒர்க் போன்ற திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கும், சான்றிதழ்களை வழங்கினார். அகாடமி பயிற்றுநர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.