Perambalur: Chickenpox vaccination camp; Collector information!

Model
பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2025-ஆம் ஆண்டு 01.02.2025 முதல் 14.02.2025 வரை இருவாரங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 08 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.