Perambalur: “Chief Minister with People” program in Aladhur Union; Collector Notice!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. எரிசக்தி துறை/தமிழ்நாடு மின்சார வாரிய துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, உள் துறை (காவல்), மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை,

வேளாண் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை, மாவட்ட தொழிற்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 துறைகளில் வழங்கப்படும் 45 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெற்றுகொள்ளலாம். இச்சிறப்பு முகாமானது காலை 10.00 மணியிலிருந்து மாலை 03.00 மணி வரை நடைபெறும்.

அதன்படி, ஆதனூர், கொட்டரை, பிலிமிசை, எலந்தங்குழி கிராம பொதுமக்கள் 25.07.2024 அன்று மேலமாத்தூர், ஆனந்தம் திருமண மஹாலில் நடைபெறும் முகாமிலும், அல்லிநகரம், கீழமாத்தூர், நொச்சிக்குளம், கூத்தூர் கிராம பொதுமக்கள் 26.07.2024 அன்று அல்லிநகரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமிலும், ஜமீன்பேரையூர், புஜங்கராயநல்லூர், அருணகிரிமங்கலம், ராமலிங்கபுரம், சில்லக்குடி, ஜமீன்ஆத்தூர் கிராம பொதுமக்கள் 30.07.2024 அன்று ராமலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமிலும்,

கொளத்தூர், திம்மூர், சாத்தனூர், கூடலூர், குரும்பாபாளையம் கிராம பொதுமக்கள் 31.07.2024 அன்று கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் முகாமிலும், காரை, சிறுகன்பூர், வரகுபாடி, அயினாபுரம், கொளக்காநத்தம் கிராம பொதுமக்கள் 01.08.2024 அன்று கொளக்காநத்தம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமிலும், இரூர், நாரணமங்கலம், பாடாலூர், தெரணி கிராம பொதுமக்கள் 02.08.2024 அன்று பாடாலூர் ராஜ் திருமண மஹாலில் நடைபெறும் முகாமிலும்,

நக்கசேலம், சிறுவயலூர், குரூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், மாவிலங்கை கிராம பொதுமக்கள் 06.08.2024 அன்று செட்டிக்குளம் ஆத்திநாட்டார் திருமண மஹால் நடைபெறும் முகாமிலும் மற்றும் எலந்தலப்பட்டி, டி.களத்தூர், கண்ணப்பாடி, தேனூர் கிராம பொதுமக்கள் 07.08.2024 அன்று எலந்தலப்பட்டி ரெங்கநாயகி திருமண மஹாலில் நடைபெறும் முகாமிலும் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம், என கலெக்டர் கிரேஸி பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!