Perambalur: Chief Minister’s special camp with the people 3rd Phase; Ministers Sivashankar and Ganesan provided welfare assistance worth Rs. 3.94 crore!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட மேலப்புலியூர், தேவையூர், கை.களத்தூர், நூத்தப்பூர், வெங்கலம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக பகுதிகளுக்கான 3ம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை கலெக்டர் கிரேஸ் தலைமையில் தொடங்கி வைத்து, 505 பயனாளிகளுக்கு ரூ.3.94 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
மேலப்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 200 நபர்களுக்கு ரூ.1,76,18,773 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 81 நபர்களுக்கு ரூ.54,31,653 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கை.களத்தூர் உராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 93 நபர்களுக்கு ரூ.72,18,442 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், நூத்தப்பூரில் நடைபெற்ற முகாமில் 58 நபர்களுக்கு ரூ.45,78,379 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வெங்கலம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற முகாமில் 73 நபர்களுக்கு ரூ.44,93,753 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 505 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் மூலம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சமூகநலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம், தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், தோட்டக்கலைத்துறையின் மூலம் வெங்காயக்கொட்டகை அமைக்க ஆணைகள், வேளாண்பொறியியல் துறையின் மூலம் இடுபொருட்கள் மற்றும் வேளாண்இயந்திரங்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3.94 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள் துரைசாமி ராஜ்குமார், மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சித் துணைத்தலைவர் ஆதவன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.