Perambalur: Children who have lost their parents should be declared children of the Chief Minister; U SEED TRUST REQUEST!

தாய் – தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளை முதல்வரின் குழந்தைகள் என அறிவிக்க வேண்டும் என உன்னை அறிந்தால் மாணவர் கல்வி மேம்பாட்டு மையம் தமிழக முதல்வருக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.

U SEED TRUST (உன்னை அறிந்தால் மாணவர் கல்வி மேம்பாட்டு மையம் ) அறக்கட்டளை சார்பில் பெரம்பலுாரில் தாய் – தந்தை இருவரும் இல்லாத மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அமைப்பின் நிறுவினர் & தலைவர் கலைநாதன் தலைமையில் நடந்தது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன், உதிரம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் உதிரம் நாகராஜ், மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். அஸ்வின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஆர்.வி. கணேசன், ஆசிரியர் தமிழ்மகன் இளங்கோ, ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன், ஆசிரியர் சங்கர், கவிஞர் அகவி உட்பட பலர் பேசினர்.

விழாவில், பெரம்பலுார் சப்-கலெக்டர் கோகுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 9,10,11,12ம் வகுப்பு பயிலும் தாய், தந்தை இருவரும் இல்லாத அரசு பள்ளி மாணவ, மாணவியர் 150 பேருக்கு பள்ளி சீருடை, புத்தக பை, டிக்சனரி, நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கி பேசினார்.

இதில், தாய் -தந்தை இருவரையும் இழந்து ஏழ்மையிலும், ஆதரவின்றி வாழும் குழந்தைகள் வயதான தாத்தா, பாட்டி பராமரிப்பிலும், விடுதிகளிலும், ஏதாவது ஒரு உறவினர்களின் பராமரிப்பிலும் வளர்ந்து அன்பு, ஆதரவுக்கு ஏங்கும் குழந்தைகளை தத்தெடுத்து முதல்வரின் குழந்தைகள் என்று அறிவிக்க வேண்டும்.

முதல்வரின் குழந்தைகள் என்ற பெயரில் அடையாள அட்டை வழங்க வேண்டும் பள்ளி கல்விக்கு தேவையான அனைத்து கல்வி துணை பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், வருமான சான்று கேட்கக்கூடாது, தமிழகம் முழுதும் பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும், உயர்கல்வியில் அனைத்து சாதி, மதம் சார்ந்த குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடும், முன்னுரிமையும் வழங்க வேண்டும், போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், முன்னுரிமையும் வழங்க வேண்டும்.

வீடற்ற குழந்தைகளுக்கும் அவரது பராமரிப்பாளர்களுக்குமான இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும். இலவச மருத்துவம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கும் வகையில், சப் கலெக்டர் கோகுலிடம் கோரிக்கை மனுவாக கொடுக்கப்பட்டது. இந்த அமைப்பு மூலம் இன்று மாணவர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக சரத்குமார் சுனில் வரவேற்றனர். அசோக்குமார் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!