Perambalur: Citizen consumer awareness meeting at Ladapuram school!
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியர் த.மாயக்கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
பெரம்பலூர் நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் நுகர்வோர் யார்? பல்வேறு முத்திரைகளுக்கு விளக்கம், சமூகத்தில் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கினார். சுகாதார ஆய்வாளர் ராஜகோபால் அயோடின் குறைபாடு பற்றி விளக்கினார். சுகாதார ஆய்வாளர்கள் மனோகரன், அருண், ஆசிரியர்கள், சிலம்பரசி அருணா உள்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் பாலச்சந்திரன் வரவேற்றார். ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.