Perambalur: Citizens blocked the road with empty jugs to condemn the municipal commissioner for not properly distributing drinking water!
பெரம்பலூர் நகராட்சி 1வது வார்டில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை காலி குடங்களுடன், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதி அளத்தின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.