Perambalur: Citizens objected to keep Hundi in the temple and petitioned the collector!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கோவிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் மிருணாளினியிடம் மனு கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

அய்யனார் கோவிலுக்கு ஊரில் நாங்களாகவே குடிஅமைத்து வசூல் செய்து காலாங்காலமாக கோவில் திருவிழா கும்பாவிசேகம் தினசரி பூசை செய்துவருகிறோம். கோவிலில் சாமியை யார் வேண்டுமானாலும் வழிபடலாம். அதற்கு தடையில்லை. இது நாள்வரை வழக்கபடி எங்களுக்கு உள்ளகவே வசூல் செய்து கோவில் நிர்வாகம் நடத்தி வருவதாகவும், கிறோம். இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எங்கள் நிர்வாகத்தில் தலையிட பல முறை முயற்சி செய்து, முடியாமல் போனதால், அவர்கள் ஆர்பாட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்பினர். இதனை அறிந்த குன்னம் வட்டாசியர் எங்களை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு கடந்த 25.8.225 அழைந்தார்.

பேச்சு வார்த்தைக்கு நாங்கள் மட்டும் சென்றோம். எதிர் தரப்பினர் யாரும் உள்ளே வரவில்லை அதற்கு எங்களுக்கு அத்தாட்சி கொடுத்தார். ஆனால், வருகின்ற 5-9-025 அன்று எங்கள் கிராம கட்டுப்பாடில் உள்ள கோவிலில் உண்டியல் வைக்க நாங்கள் ஒத்து கொண்டது போல் ஒரு உத்தரவை குன்னம் வட்டாச்சசியர் மற்ற தரப்பினருக்கு கொடுத்துள்ள இது சட்ட விரோதமாகவும் நாங்கள் கோவிலில் சாமி கும்பிட தடுத்தால் பிரச்சனை செய்யலாம், மாறாக நாங்கள் வசூல் செய்து நிர்வாகம் பார்த்து வருவதில் மற்றொரு தரப்பினர் பிரச்சனை செய்வதால், எங்களுடைய பழக்க வழக்கம், வழிபாட்டு முறை, பாரம்பரியம் ஆகியவை பாதிக்கும் என்றும்,

காலம் காலமாக வழக்கத்தின்படி அய்யனார் கோயிலில் பராமரித்து எங்களுக்குள்ளே வசூல் செய்து குலதெய்வம் வழிபாடு செய்து வருவதை மற்றொரு தப்பினர் சுயலாபத்திற்காக அதில் தலையிடுவது தடுத்து நிறுத்த வேண்டும், என்றும், குன்னம் வட்டாட்சியர் எதிர் தரப்பினர் வராமலே நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் வருகின்ற 5- 9 -25 ம் தேதி காருகுடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் உண்டியல் வைக்க ஒரு தலைப்பட்சமான உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டத்திற்கு விரோதமானது என்றும், ஆகவே, எங்கள் கோவிலில் வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் உரிய மீது நடவடிக்கை எடுத்து பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அந்த மனு தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் மிருணாளினி , காவல் துறையிக்கு அனுப்பி, உரிய விசாரணை நடத்தி அறிக்கை வழங்க உத்திரவிட்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!