Perambalur: Citizens who protested the construction of the crusher and captured the trucks!
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தில், கிரசர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து லாரிகள் வருகையால் ஏற்படும் புழுதி மற்றும் சாலை சேதங்களை திகட்டுப்படுத்த கோரி இன்று கல்பாடி – பெரம்பலூர் சாலையில் பொதுமக்கள் லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில், ஈடுபட்டனர்.
வருவாய் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.