Perambalur Co-operative Employees Wearing Demand Card!

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அளவில் ஒருநாள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட அறிவித்ததை தொடர்ந்து பெரம்பலூர் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

விகிதாச்சார விதிகளை தளர்த்தி தகுதியுள்ள அனைத்து இளநிலை ஆய்வாளர்களை முதுநிலை ஆய்வாளர்களாகவும் பதிவறை எழுத்தர் அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் ஆகியோரை இளநிலை உதவியாளர்களாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை3 ஆகியோரை இளநிலை ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

1.5.2022 அன்று வரை கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வு பட்டியலையும், 1.10.2020 வரை துணைப் பதிவாளர் பதவிஉயர்வு பட்டியலையும் வருகிற 31.5.2022க்குள் அங்கீகரித்து பணியிடம் வழங்க வேண்டும், கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவலர் மற்றும் பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல் இயக்குநராக நியமணம் செய்ய வலயுறுத்தும் பதிவாளர் சுற்றறிக்கையை கைவிட வேண்டும், போதிய கால அவகாசமின்றி புள்ளிவிவரம் கோருவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அட்டையுடன் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கோரிக்கைகள் நிறைவேறா பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநிலம் முழுதும் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!