Perambalur : Co-operative sector not under collector control: Crackers shop running at loss due to high prices and removal by officials!
பெரம்பலூரில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவுத் துறை சார்பில் துறைமங்கலம் பகுதியில் பட்டாசுக் கடை திறப்பது வழக்கம். இந்த ஆண்டு பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அருகிலேயே துறைமங்கல் ரேசன் கடையில் தமிழ்நாடு அரசு முதியோர்களுக்கு வழங்கும், இலவச வேட்டி – சேலைகள் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ உடன் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொண்டார். பின்னர், துறைமங்கலம் பணி மனை அருகிலேயே கூட்டுறவு சங்கத்தின் தீபாவளி பட்டாசுக் கடை விற்பனை தொடக்க விழா நடந்தது.
கூட்டுறவு பட்டாசுக் கடையில், மற்ற கடைகளை விட கூடுதல் விலைகளில் பட்டாசு விற்பதால் பொதுமக்கள் வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், கூட்டுறவு சங்கத்தில் பணிசெய்பவர்கள், அதிகாரிகள் ஆளாளுக்கு எடுத்துக் கொண்டு செல்வதால், கூட்டுறவு பட்டாசு கடையின் லாபம் – நட்டக் கணக்கை பொதுவெளியில் தெரிவிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
கூட்டுறவு சங்கங்கள் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் கடன் வழங்குவது, தலைவர், செயலர் ஆதரவு இருந்தவர்கள் கவரிங் நகையை கூட அடகு வைத்து பணம் வழங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும், பொதுமக்கள் அறியும் வகையில் செயல்பாடுகளை கொண்டு வரவேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.