Perambalur: Collector announces helpline to report electricity complaints during the rainy season!

மின்சாரம் மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ளது. தமிழ்நாடு அரசு மின் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப சீரான தடையற்ற மின் இணைப்பு வழங்கி வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லாமல் மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மழை மற்றும் வெள்ள பாதிப்பினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் போது மின் கம்பங்கள் சேதமடைந்தாலோ, மின் பாதை துண்டிப்பு ஏற்பட்டு தரையில் கிடந்தாலோ, மின்கம்பம் சாய்ந்து இருந்தாலோ, அதன் அருகில் செல்லாமலும் தொடர் மின் தடை ஏற்பட்டாலோ, மற்றும் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 94987 94987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

94987 94987 is the helpline number for the Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO). It is a 24/7 call center that consumers can use to register complaints and get assistance with issues like power outages, billing errors, and meter problems

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!