Perambalur: Collector late for awareness rally; Students fainted from the sun!

பெரம்பலூரில் இன்று காலை 10 மணி அளவில், பாலக்கரையில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக தனியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவிகள் சுமார் காலை 9 மணி முதல் வந்து காத்துக் கிடந்தனர்.

இன்று காலை வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால், வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதைக் கண்ட சக மாணவிகள், ஆசிரியர்கள், ஆட்டோ டிரைவர்களிடம் தண்ணீர் வாங்கி கொடுத்து மயங்கிய மாணவிகளை ஆசுவாசப்படுத்தி மயக்கத்தில் இருந்து மீட்டு எழுப்பினர்.

பின்னர், அங்கிருந்தவர்கள் மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவத்தை கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவிகள் மயங்கி விழுந்ததையடுத்து கலெக்டர் நிகழ்ச்சிக்கு வராமல், அங்கிருந்த அதிகாரிகளை நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க உத்தரவிட்டார். மருத்துவ இயக்குனர் பிரதாப் குமார் கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். காலை முதலே வெயிலில் நின்றதால் மாணவிகள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு வேர்வை வழிந்ததால், தாகம், சோர்வால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!