Perambalur: Collector launches sale of Pongal grocery packages at ration shops for Rs. 199!
பெரம்பலூர் மாவட்ட ரேசன் கடைகளில் பொங்கல் வைக்க தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் விற்பனையை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.
உழவர்கள் அறுவடை திருநாளாம் தைப்பொங்கல் எதிர்வரும் 14.01.2025 அன்று முதல் உலகத் தமிழர் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ ரேசன் கடைகளில் ரூ.199க்கும் மற்றும் ரூ. 499க்கும் மளிகைப் பொருட்கள் சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி (BPT 43) 500 கிராம், பாகு வெல்லம் 500 கிராம், ஏலக்காய் 5 எண்ணிக்கை, முந்திரி 50 கிராம், ஆவின் நெய் 50 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், உலர் திராட்சை 50 கிராம், சிறிய பை 1 எண்ணிக்கை ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.199 க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள் 50 கிராம், சர்க்கரை 500 கிராம், துவரம் பருப்பு 250 கிராம், கடலை பருப்பு 100 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், உளுத்தம் பருப்பு 250 கிராம், உப்பு 1 கிலோ, நீட்டு மிளகாய் 250 கிராம், தனியா 250 கிராம், புளி 250 கிராம், பொட்டுக்கடலை 200 கிராம், மிளகாய்த்தூள் 50 கிராம், செக்கு கடலை எண்ணெய் 1/2 லிட்டர், கடுகு 100 கிராம், சீரகம் 50 கிராம், மிளகு 25 கிராம், வெந்தயம் 100 கிராம், சோம்பு 50 கிராம், பெருங்காயம் 25 கிராம், மளிகை பை 1 எண்ணிக்கை ஆகியவை அடங்கிய தொகுப்புகள் ரூ.499 க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் முத்துநகர் அருகே உள்ள ரேசன் கடையில் தொடங்கி வைத்தார். அரசு அலுவலர்கள், ரேசன் கடை பணியாளர் கர்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.