Perambalur: Collector lays foundation stone for new building construction for IOB – RSETI!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல், ஆயுதப்படை மைதானம் அருகில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் புதிய கட்டடத்திற்க்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடந்தது.
கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கிட ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கிகள் வாயிலாக ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institute) அமைக்கப்படுகின்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தலில் ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் கட்டிடம் கட்டுவதற்கான பணியினை கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மண்டல மேலாளர் வெங்கடசுப்ரமணியன், முதன்மை மேலாளர் அஸ்வத் ராமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத் குமார், பெரம்பலூர் மேலாளர் இளவேனில், இயக்குநர், ஊரக சுய வேலைவாய்ப்பு மையம் ஆனந்தி மற்றும் பயிற்சி மைய அலுவலர்கள் அன்னம், தமமுன்னிஷா, பயிற்சியாளர்கள் மற்றும் பெரம்பலூர் தாசில்தார் சரவணன், எளம்பலூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் சித்ராதேவி குமார், வி.ஏஓ அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.