Perambalur: Collector notice to file election expenditure accounts for all candidates!
கடந்த 19.04.2024 அன்று நடந்து முடிந்த பாரளுமன்ற பொது தேர்தல்கள் 2024-ல் 25.பெரம்பலூர் பாரளுமன்ற தொகுதியினில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் 30.06.2024 அன்று மாவட்ட ஆட்சியரகத்தினில் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்படும் தேர்தல் செலவின கணக்குகள் இறுதி ஒத்திசைவு கூட்டத்தில் 04.06.2024 நாள் வரையிலான தேர்தல் செலவின கணக்குகள், வங்கி கணக்கு புத்தகம், அன்றாட செலவின கணக்கு பதிவேடு மற்றும் அனைத்து பற்று சீட்டுகள் மற்றும் செலவு சீட்டுகள் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து வேண்டுமாய் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள்ளாக (04.07.2024-ம் தேதிக்குள்) தேர்தல் செலவின கணக்குகள், வங்கி கணக்கு புத்தகம், அன்றாட செலவின கணக்கு பதிவேடு, சுருக்க அறிக்கை (பாகம் I முதல் III மற்றும் அட்டவணைகள் 1 முதல் 11 வரையிலானவை), அனைத்து பற்று சீட்டுகள் செலவு சீட்டுகள் (வரிசை எண் இடப்பட்டவை) மற்றும் உண்மையான உறுதி ஆவணம் தேர்தல் செலவினம் மேற்கொள்ள தொடங்கப்பட்ட வங்கி கணக்கு விவர நகல்கள் பூர்த்தி செய்யப்பட்டது மற்றம் சுய சான்றொப்பமிட்டப்பட்டவை ஆகியவற்றினை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
குறித்த நேரத்தில் உரிய முறையில் தேர்தல் செலவின கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை எனில் 1950 ஆம் ஆண்டு பிரதிநிதித்துவ சட்டத்தின் 10A ஆம் பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கு ஆணையத்தால் அறிவிக்கை அளிக்கப்படும், தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.