Perambalur: Collector who cannot speak Tamil should be replaced; Public request to the government!

பெரம்பலூரில் இன்று சுதந்திர தினம் நடைபெற்றது. அதில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொண்டார். மேலும், அவர் அறிவித்தப்படி கிராம சபைக் கூட்டம், சமபந்தி விருந்தும் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு எம்.பி ஒருவர் முதன்முறையாக சுதந்திர தின விழாவில் தொகுதி எம்.பி. அருண் நேரு கலந்து கொண்டர். தொகுதி எம்.எம்.எல். பிரபாகரனும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர்.

கலெக்டர் கிரேஷ் பச்சாவ், எம்.பி அருண்நேரு, எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகிய மூவரும் இணைந்து ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் இன்று கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி செயலாளர் அறிக்கை வாசித்த பின்பு, கலெக்டர், அத்தொகுதி எம்.பி, எம்.எல்.ஏக்கள் நாட்டு குடிமக்களுடன் உரையாடி குறைகளை கேட்டறிவர். தீர்க்க முடிந்த, முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள். ஆனால், கிராம சபைக் கூட்டத்தில், பொதுமக்கள் பேச மைக்கும் கொடுக்கப்படவில்லை, வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.

கலெக்டருக்கு தமிழில் பேச முடியாது என்பதால், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசமாட்டார். அப்படியும் பேசினால், ஓரிரு வார்த்தைகளை மட்டுமே பேசுவார். அது ம். ஆம்.. ஆக உள்ளது. மேலும், கிராம பகுதிகளை சேர்ந்த எளிய பொதுமக்கள் பேசும் வட்டார வழக்கு மொழிகளையோ, பேச்சு நடையையோ அவரால் புரிந்து கொள்ளவும், முடியவில்லை, திரும்ப மக்களிடம் பேசவும் முடியவில்லை. மனுவை வாங்கும் கலெக்டர் அருகில் இருக்கும் உதவியாளர் அல்லது அதிகாரிகளிடம் கொடுத்து விடுகிறார். இது அதிகாரிகளுக்கு நல்வாய்ப்பாக உள்ளது.

மேலும், நாரணமங்கலம் கிராம சபைக் கூட்டத்தில் பல பிரச்சனைகளை எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-யிடம் தெரிவிக்கவோ, பேசவோ வாய்ப்பு அளிக்கப்படாமல் மைக் ஆப் செய்யப்பட்டது. கலெக்டர் நின்றுக் கொண்டே மனுக்களை அவசர அவசரமாக வாங்கினார். அதனை அருகில் இருந்த அலுவலரிடம் கொடுத்தார். மேலும், அந்த ஊராட்சித் தலைவர் பத்மாவதி ஆப் செய்த மைக்கிலேயே நன்றி தெரிவித்தார்.

கூட்டம் தொடங்கி சுமார் 10 நிமிடத்தில் அவசரஅவசரமாக கிராம சபைக் கூட்டம் முடிவடைந்தது. எம்.பி, எம்.எல்.ஏ, கலெக்டர் 3 பேரும் கிராம சபைக் கூட்டத்திற்கு அரிதான ஒன்று நடந்து பயனற்று போய்விட்டது. கலெக்டர், எம்.எல்.ஏ, எம்.பி வெளியேறிய பின்னர், பொதுமக்கள் ஊராட்சித் தலைவரின் கணவரிடம் முறையாக கூட்டம் நடத்தவில்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தமிழில் பேச முடியாததால், கூட்டம் கடமைக்கு நடத்தி முடிக்கப்பட்டது. இது ஜனநாயகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு முரணானது. நாரணமங்கலம் கிராமத்தில், மீண்டும் அறிவிப்பு செய்து கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போன்று சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்திலும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொள்ளாமல், அவருக்கு பதிலாக டி.ஆர்,ஓ கலந்து கொண்டார்.

தமிழ் பேச முடியாத கலெக்டரால் பாதிக்கப்படுவது, சாதாரண எளிய பொதுமக்களே, எனவே, போர்க்கால அடிப்படையில், கலெக்டர் கிரேஸ் பச்சாவை மாற்றம் செய்து விட்டு, தமிழ் பேச தெரிந்த தஞ்சாவூர் கலெக்டர் பங்கஜம், பெரம்பலூர் முன்னாள் கலெக்டர் கற்பகம் போன்ற சமூக பொறுப்புள்ள கலெக்டரை நியமனம் செய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வர்கள், அரசியல் பிரமுகர்கள் விரும்புகின்றனர்.

கலெக்டர் வேலை என்பது கையெழுத்து வேலை மட்டும் அல்ல! அது மக்களோடு மக்களாக பழகி பேசி அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து என்பதால், நல்ல எளிய மக்கள் அணுகும் வகையில் தமிழ் பேச தெரிந்த கலெக்கடரை விரைவில் நியமனம் செய்வதால் கடைகோடி மக்களுக்கு உதவியாக இருக்கும்!

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!