Perambalur: Collector’s information on sports competitions on the occasion of International Day of Persons with Disabilities.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டு அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் 28.11.2024. அன்று காலை 10:30 மணிக்கு டாக்டர்.எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட உள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள வருபவர்கள் போட்டி அன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், (முதலிடத்தில் வெற்றி பெற்றவர்களை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிட ஆளறி அட்டை வழங்கிடும் நோக்கத்திற்காக) ஒரு பாஸ்போர்ட் சைஸ் அளவிலான புகைப்படம், தொலைபேசி எண், பள்ளியின் அடையாள அட்டை (Students ID card) ஆகியவற்றுடன் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
செவித்திறன் பாதிக்கப்பட்டோர்களுக்கு 12 வயது முதல் 14 வயது வரை ஓட்டப்பந்தயம்-100 மீ மற்றும் நீளம் தாண்டுதல், 15 வயது முதல் 17 வயது வரை ஓட்டப்பந்தயம் – 200மீ மற்றும் குண்டு எறிதல், 17 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓட்டப்பந்தயம்-400மீ தொடர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளும், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர்களுக்கு 12 வயது முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல் (ஆண்கள்), ஓட்டப்பந்தயம் 100மீ(ஆண்கள்), 12 முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல் (பெண்கள்), ஓட்டப்பந்தயம் 50மீ;(பெண்கள்),
15 வயது முதல் 17 வயது வரை குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் 100மீ, 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் வட்டத்தட்டு எறிதல் (ஆண்கள்), ஓட்டப்பந்தயம்-200மீ (ஆண்கள்), 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் வட்டத்தட்டு எறிதல் (பெண்கள்), ஓட்டப்பந்தயம்-100மீ (பெண்கள்) 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்பு பள்ளிகள்) குண்டு எறிதல், கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் இருபாலாருக்கும் ஓட்டப்பந்தயம் 100மீ ஆகிய போட்டிகளும்,
கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு (நடக்கும் சக்தியற்றவர்கள்) போட்டிகள் (உதவி உபகரணங்களின் உதவியுடன்) – இருபாலருக்கும் பொதுவாக இப்போட்டிகள் 12 வயது முதல் 14 வயது வரை காலிப்பர் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடப்பவர்கள் நடைப்போட்டி – 50மீ, 15 வயது முதல் 17 வயது வரை மூன்று சக்கர வண்டி ஒட்டப்போட்டி 150மீ(ஆண்கள்) 15 வயது முதல் 17 வயது வரை மூன்று சக்கரவண்டி ஒட்டப்போட்டி 100மீ (பெண்கள்),17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலி, ஓட்டப்போட்டி-75மீ ஆகிய போட்டிகளும்
கைகள் பாதிக்கப்பட்டோர்களுக்காக 12 வயது முதல் 14 வயது வரை ஓட்டப்பந்தயம் – 50 மீ, 15 வயது முதல் 17 வயது வரை – ஓட்டப்பந்தயம் – 100மீ(ஆண்கள்), 15 வயது முதல் 17 வயது வரை – ஓட்டப்பந்தயம் – 75மீ (பெண்கள்),17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டப்பந்தயம் (ஆண்கள்) – 200மீ, 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டப்பந்தயம் (பெண்கள்) – 100மீ ஆகிய போட்டிகளும்,
அறிவுசார் குறையுடையோருக்கு 12 வயது முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல், 15 வயது முதல் 17 வயது வரை – ஓடி நீளம் தாண்டுதல், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டப்பந்தயம்-100மீ ஆகிய போட்டிகளும், ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கு 12 வயது முதல் 14 வயது வரை உருளைக்கிழங்கு சேகரித்தல், 15 வயது முதல் 17 வயது வரை கிரிக்கெட் பந்து எறிதல், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடை தாண்டி ஓடுதல் ஆகிய போட்டிகளும்,
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுவாக ஓட்டப்பந்தயம் (ஆண்கள்) -800மீ, ஓட்டப்பந்தயம் (பெண்கள்) – 400மீ ஆகிய போட்டிகளும் நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள்; அதிகளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.