Perambalur Collector’s Office Redressal Day Meeting If there are no officials to buy The Petition in time, the public will be waiting!

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும்.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கடைபிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். அங்கு குறைகளை மனுக்களாக கொடுதது நடடிவக்கை எடுக்காத காரணத்தினாலோ, சிலர், மக்கள் சாசனத்திற்கு எதிராக கையூட்டு பெற ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அலைகழிக்கலாம். அதனை உயர் அதிகாரியும், மாவட்ட நிர்வாக நடுவருமான கலெக்டரிடம் மனு கொடுப்பது வழக்கம்.

அது காலை 10 மணிக்கே அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கும். அதிகாரிகள் வந்து உரிய காலத்தில் மனுக்களை பெற்று, சம்பந்தப்படட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பார்.

மனுதாரர் முன்கூட்டியே மனு கொடுத்திருந்தால், அதற்கான விளக்கமும், அல்லது புதிதாக மனு கொடுத்தால், அதற்கு உரிய நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுப்பதாக தெரிவிப்பார்.

ஆனால், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், உரிய காலத்தில் கலெக்டர் உள்பட அதிகாரிகள் மனு வாங்க ஆர்வமில்லாமல் உரிய நேரத்தில் வரவில்லை.

ஆனால், பொதுமக்கள் காலை 10 மணி முதலே அதிகாரிகளிடம் மனு கொடுக்க காத்திருந்தனர். ஆனால், 10 மணி, 10.30, 10.45 என ஆனதே தவிர யாரும் உரிய காலத்தில் மனு வாங்க அதிகாரிகள் இல்லாததால், தாசில்தார்கள், நகராட்சி, பேரூராட்சி, மற்றும் இதர துறை வாரியான அதிகாரிகளும், பொதுமக்களோடு காத்து கிடந்தனர்.

10 மணிக்கு வாங்க வேண்டிய மனுக்களை பெரம்பலூர் கலெக்டர் உள்பட அனைத்து உயர் அதிகாரிகளும் வேண்டா வெறுப்பாக சுமார் 11 மணிக்கு மனுக்களை வாங்க வருவதால் பொதுமக்களின் கூட்டம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஓரிரு நிமிடங்கள் மனுதாரர்கள் தாமதமாக வந்தால், அடுத்து திங்கட்கிழமை வாங்க எனக்கூறும் அதிகாரிகள் உரிய நேரத்தை கடைபிடிக்க வேண்டாமா!

எனவே, கலெக்டர் வெங்கடபிரியா உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும், உரிய நேரத்தில் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து, மக்களை காக்க வைக்காமல் மனுக்களை பெற வேண்டும், மனு வாங்க ஆர்வமில்லாத அதிகாரிகள், கூட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு விடுக்க வேண்டும்.

மேலும் மக்கள் பணியில் ஆர்வமில்லாத அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!