Perambalur: College Exhibition of Products of Women Self Help Groups inaugurated by the Collector.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி, 3 நாட்கள் நடக்கும் கல்லூரி சந்தையை, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் கலந்து கொண்டு தங்களது உற்பத்தி பொருட்களான மரச்சிற்பம், சணல் பை, சிறுதானிய உணவுகள்,அலங்காரப் பொருட்கள், பாசிமணி, படிக மணி, மூலிகை சோப்பு, போன்ற கைவினைப்பொருட்கள் மற்றும் ஆடைகள் ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.
இக்கண்காட்சியினை பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களை வாங்கிச் சென்று பயன்படுத்தி பயன்பெறலாம்.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் அ.அமுதா, தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பணியாளர்கள், மற்றும் அரசுத் துறையை சேர்ந்த அனைத்து பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.