Perambalur: College student commits suicide by hanging herself! Police investigating!

பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டி அருகே உள்ள சாஸ்திரிபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிர்காமம் மகள் கவுரி. இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் BCA 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பெற்றோருடன் சாஸ்திரிபுரம் வீட்டில் இருந்தார். இவரது தாய் சரசு, தந்தை கதிர்காமம் இருவரும் அவர்களுடைய விவசாய வயலுக்கு சென்று விட்டனர். வீட்டருகே இருந்த உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கவுரி சேலையில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கிகொண்டு இருந்தார். இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார், கவுரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவி தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.











kaalaimalar2@gmail.com |
9003770497