Perambalur: Condemning delay in payment of cash benefits, bus workers strike road: Arrested!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்கம் சார்பில் இன்று காலை அவர்களின்பிரச்சினைகளை 100 நாளில் தீர்த்து கொடுப்பேன் என தமிழக முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், பணி ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் ஓய்வு கால பண பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும் பெரம்பலூர் தீரன் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையதோடு, அவர்களை கைது செய்து துறைமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
காலை 8.30 மணிமுதல் 9 மணி வரை சுமார் அரை மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பயணிகள் காலதாமதமாக தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.