Perambalur: Contesting under IJK’s own symbol in Kunnam? Pari Vendhar selected candidates in an open manner at a meeting of activists!

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி கொடுப்பதற்கே திமுகவினர் லஞ்சம் பெற்று அதனை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் பாடுபடுவதாக பொய் சொல்லி வருகிறார்கள் என இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நிறுவன தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூரில் பேசினார்.
குன்னம் சட்டமன்றத் தொகுதி ஐஜேகே செயல்வீரர்கள் கூட்டம் அந்தூர் கிராமத்தில் நடந்தது. கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், மாநில தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், பாரிவேந்தர் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது. பொதுமக்கள் எதற்காக சென்றாலும் லஞ்சம் கேட்கிறார்கள்.மேலும் சொந்த கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி கொடுப்பதற்கு திமுகவினர் லஞ்சம் பெறுகிறார்கள். இது மட்டுமின்றி அரசின் உயர் பதவிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம், பெறுவதோடு இந்த பணம் முழுவதும் அக்கட்சியின் தலைமைக்கு செல்கிறது. இதனை அவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தில் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்கிறார்கள். நீங்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் போதும் என்று கூறி அவர்களுக்கே வாக்களித்து தொடர்ந்து வெற்றி பெறச் செய்கிறீர்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்த திமுக தலைவர்கள் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் பாடுபடுவதாக சொல்லி கூறி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், தற்போது அமைந்துள்ளது வலுவான கூட்டணி என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அக்கட்சியின் மாநில தலைவர் ரவி பச்சமுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தாவது: இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாக நாங்கள் வந்து கலந்தாய்வுக் கூட்டத்தை ஆரம்பித்து விட்டோம். எல்லா மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளோம். இன்று குன்னம் மற்றும் திருக்கோவிலூர் தொகுதிகளில் கூட்டம் நடத்துகிறோம். இதன் மூலமாக கட்சி தேர்தல் பிரச்சாரத்தை நிறுவனர் பச்சமுத்து தொடங்கியிருக்கிறார்.

என்.டி.ஏ (NDA) கூட்டணியில் ஐஜேகே-விற்கு 7 தொகுதிகள் கேட்டிருக்கோம். எல்லாம் பேச்சு வார்த்தையில் உள்ளன. பிரதமர் தமிழகம் வந்து சென்ற பிற்குதான் அறிவிப்பார்கள் என நினைக்கிறேன். உறுதியான தனிச் சின்னத்துல போட்டியிடுவோம். இலவசம் என்று இப்ப எல்லாரும் வராங்க. வந்துட்டு வேற வழியில்லாம அத காப்பியடிக்கிற சூழ்நிலை வருது. அதத் தவிர்த்தா நல்லது. ஏன் என்றால் அரசு இந்த பண்ட் எல்லாம் இருந்ததுன்னா ஒரு தொழிற்சாலைகளை உருவாக்கலாம், வேலைவாய்ப்பு உருவாக்கலாம், ஹாஸ்பிடல்ஸ் உருவாக்கலாம். அதுக்காக நான் இல்லாத ஏழை மக்கள் எல்லாம் கஷ்டப்படட்டும்னு சொல்லவில்லை அவங்களுக்கு அந்த நிலைமையே இல்லாம பண்றதுக்குதான் ஒரு முயற்சி. ஏன்னா இந்த திராவிட ஆட்சி வந்து கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளா ஆண்டுட்டு இருக்காங்க. அந்த நிலையில் மக்களுக்குத் தேவை என்ன, செல்ப் சபிஷியன்ட் என்று பார்த்து தன்னிறைவு பெற்ற மக்களாக சுயகௌரவத்தோட வாழணும்னு நாங்க நினைக்கிறோம். அதைத்தான் எங்கள் வேந்தர் சொல்கிறார். நாங்கள் இலவச தவிர்க்க வேண்டும் என்று கூறியதையே ரஜினிகாந்தும் சொன்னார் அதேபோல இப்ப விஜய்யும் சொன்னார். இப்ப விஜய் மாறி இருக்கிறார். இது சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அப்பப்ப மாறிட்டுதான் இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கு, கோட்பாடு இருக்கு. அந்த கோட்பாட்டுல நாங்க உறுதியா இருக்குறோம். இன்றைக்கு கூட்டணி இருக்கும்போது கூட்டணிக் கொள்கைக்கு என்ன இருக்கோ என்.டி.ஏ அஜெண்டாவ நாங்க ஃபாலோ பண்ணுவோம். அதுக்காக நாங்க செய்யவே மாட்டோம்னு இல்ல. நாளைக்கு நாங்க வளர்ந்து வரும்போது எங்கள் கொள்கை கோட்பாடுகளை நிறைவேற்றுவோம். அதற்க்குதான் சொல்றோம். படிப்படியா இந்திய ஜனநாயக கட்சி வளர்ந்துவந்ததால் இந்தியாவில் ஒரு மாற்றத்தைக் கொடுக்க முடியும். ஏன்னா ஒரு தனிப்பட்ட மனிதரா வந்த எங்கள் வேந்தர் இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் இதையே ஒரு மாடலாக நாங்கள் சொல்ல விரும்புகிறோம். தமிழக மக்களே வெறுத்துப்போய் தான் இருக்குறார்கள். இந்த மாதிரி வேண்டாம்னு தான் பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறாங்க. யாரையெல்லாம் நீங்க ஏழைன்னு சொன்னீங்களோ இன்னைக்கு அவங்க மிடில் கிளாஸ் , ஆயிட்டாங்க. அவங்க பணத்த வாங்கித்தானே நீங்க செலவு பண்றீங்க. மிடில் கிளாஸாவோ, ஃபிளாட்லயோ, சென்னை சிட்டிலயோ இல்லன்னா நீங்க இருக்கக்கூடிய டவுன்லயோ, பஞ்சாயத்துலயோ இருக்காங்க. அவங்களுக்கு இலவசம் தேவையில்லை. ஆனா ஆனால் அவர்கள் பெயரைச் சொல்லி இவர்கள் அடித்து விடுகிறார்கள் இது ஒவ்வொரு உழைப்பாளிக்கும் மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என்றார்.
பின்னர், செயல் வீரர்கள் கூட்டத்தில் நீங்கள் தேர்வு செய்யும் ஒருவரே குன்னம் தொகுதிக்கான வேட்பாளராக செய்யப்படுவார் என்று பாரிவேந்தர் அறிவிப்பு விடுத்தார். வேட்பாளராக விருப்பம் உள்ளவர்கள் எழுந்து நிற்கவும், எழுந்து நின்றவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கையை உயர்த்தவும் சொன்னார். வேட்பாளராக விரும்பியர்களிடம் மைக்கை கொடுத்து கூட்டத்திலேயே பேச வைத்து கலந்துரையாடினர். .
முன்னதாக, பெரம்பலூர் 4 ரோடு, பேருந்து நிலைய பகுதிகளில் டாக்டர் பாரிவேந்தர் உள்ளிட்ட கட்சியினருக்கு பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், முன்னாள் அதிமுக அரசு தலைமை கொறாடாவும், அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் டாக்டர் பாரிவேந்தர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் நிகழ்வில் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் ரவி பச்சமுத்துவிற்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் ஆனந்த முருகன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெங்கடேசன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரமேஷ், குன்னம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைவர் எம் டி அன்பழகன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தலைவர் அழகுவேல், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.சி.ஆர். ராமலிங்கம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497