Perambalur: Continuous rain; Farmers started rainfed cultivation in Aadipatam!
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது.
நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், விலைக்கு நீரை வாங்கி பயன்படுத்தி வந்த மக்களும், வணிகர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை வரை, பெரம்பலூர் சுற்றுப் பகுதியில் 6 மி.மீ மழையும், தழுதாழை சுற்று வட்டாரத்தில் அதிகபட்சமாக சுமார் 37 மி.மீ மழையும், செட்டிக்குளம் பகுதியில் 15 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், உடும்பியம், தழுதாழை பகுதிகளில், மானாவாரி சாகுபடி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட தானிய பயிர்வகைகளையும், கால்நடை தீவனப்பயிர்களையும் கடந்த சில நாட்களாக சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.