Perambalur: Continuous sloganeering protest against the non-provision of reservation for Vanniyar!
உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 1000 நாட்கள் ஆகியும் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து வன்னியர்சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம்,
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலைஅருகே பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
பாமக மாவட்ட தலைவர் மதுரா. செல்வராஜ். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜ், பா.ம.க. மாவட்ட பொருளாளர் அம்சவள்ளி, அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்துரை. மாவட்ட அமைப்புத் தலைவர் மருதவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக .மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனுக்கூர் ராஜேந்திரன். உலக. சாமிதுரை, அன்புசெல்வன், கண்ணபிரான், ராஜதுரை, உள்ளிட்டர் பலர் கண்டன உரை நிகழ்த்தினர். நகர செயலாளர் இமயவரம்பன் நன்றி கூறினார் . நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட ஒன்றிய, பேருர், கிளை பொறுப்பாளர்கள் என பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.