Perambalur: Convict sentenced to 40 years in rigorous imprisonment and Rs. 2 lakh fine in POCSO case! District Mahila Court verdict!!
பெரம்பலூர் மாவட்டம் மருதடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் ராகவன் என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டடு, வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இன்று ராகவனை குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் ராகவனுக்கு 5(l) and 6 of POCSO Act பிரிவின் கீழ் 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் 5 (j) (ii) 6 of POCSO Act – 20 வருடம் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம், என மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2 லட்சம் அபராதம் எனவும், மேற்படி தண்டனையை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றாவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.