Perambalur: Court launches awareness campaign on reconciliation; Chief Justice flags off campaign!

பெரம்பலூர் மாவட்டத்தில் சமரச மையத்தில், கடந்த ஜூலை 3ம் தேதி முதல், நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள விபத்து, மற்றும் கொடுக்கல் – வாங்கல் பிரச்சனைகள், நிதிநிறுவன பிரச்சனைகள், காசோலை தொடர்பான வழக்குகளை கோப்பிற்கு எடுத்து மனுதாரர்களும், எதிர் மனுதாரர்கள் இடையே உள்ள பிரச்சனைகளை மத்தியஸ்தர்கள் மூலம் சமரசம் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததுடன், துண்டு பிரசுரங்களையும், பொது மக்களிடம் விநியோகம் செய்தார்.

மகிளா நீதிமன்றம், மாவட்ட நீதிபதி இந்திராணி மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், கண்ணன், சார்பு நீதிபதி மோகனப்பிரியா மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரம், சார்பு நீதிபதியும், சமரசத் தீர்வு மைய ஒருங்கிணைப்பாளரும் சரண்யா உட்பட அனைத்து நீதிபதிகளும் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்களும், மத்தியஸ்தர்களும், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!