Perambalur: Court sentences convicts in murder case to double life imprisonment, fine of one lakh; verdict!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள உப்போடை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் விஜயகுமார் (28), பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள காந்தி நகரை சேர்ந்த முஹமது அன்சாரி மகன் நவாஸ் முஹமது (27),
இருவரும் ஆத்தூர் சாலையில் சுடுகாடு அருகில் உள்ள பிளாட்டில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில், நவாஸ் முகமது, விஜயகுமாரின் கழுத்தில் பிராந்தி பாட்டிலால் குத்தினார். இதில் விஜயகுமார் கழுத்தில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக விஜயகுமாரின் தாய் மஞ்சுளா (50) கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் நவாஸ் முஹமதை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இன்று, இவ்வழக்கின் குற்றவாளிகளான நவாஸ் முஹமதுக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூபாய் 50000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனையும் மற்றும் SC/ST Act குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூபாய் 50000/- அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியும், SC/ST சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதியுமான இந்திராணி உத்தரவிட்டார். வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் போலீசாரை, எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.