Perambalur: Crocodile in Vellaur; Public flees after seeing it! Forest department rushes to catch it! People of coastal district are scared!

மாதிரி போட்டோ

பெரம்பலூர் – கடலூர் இரு மாவட்ட எல்லைப்பகுதியில் வெள்ளாறு பாய்ந்து ஓடுகிறது. இன்று தொழுதூர் அணை கட்டிற்கும் கிழக்கு பகுதியில் திருமாந்துறை லப்பைக்குடிக்காட்டிற்கும் இடைப்பட்ட வெள்ளாற்று கரையில் இன்று மதியம் இருவர் முதலையை நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும், பார்த்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பயத்தில் சிறுநீர் கழித்துள்ளர். இச்சம்பவம் குறித்து, அப்பகுதியினருக்கு தெரியவரவே கரைப்பகுதிக்கு கும்பலாக சென்றுள்ளனர். முதலை புதருக்குள் மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் 2 ஆடுகள் காணமல் போனதும், ஆடுகளை முதலை வேட்டையாடி இருக்காலம் என பொதுமக்கள் கருதுவதோடு, சமூக வலைத்தளங்களில் இது குறித்த, செய்தி மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மேலும், பெரம்பலூர் – கடலூர் மாவட்டத்தை வெள்ளாற்று கரையோர மக்களை இச்சம்பவம் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து, தகவல் அறிந்த வனத்துறையினர் இருவர் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வனத்துறையினர் கவுள்பாளையத்தில் சிறுத்தை விசயத்தில் அலட்சியம் போல், முதலை அலட்சிய்படுத்தாமல் உறுதிப்படுத்தி பொதுமக்களின் அச்சத்தை போக்கவும், முதலை இருந்தால் உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!