Perambalur Cyber Crime Police have found the lost money and lost cell phones and handed them over to the relevant persons!

பெரம்பலூர் மாவட்டத்தில் 16.03.2022 முதல் 25 ஸ்மார்ட் மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகார்களில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 20 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், பணத்தை இழந்த 4 நபர்களில் ஒருவர் ரூ.1,50,000 இழந்ததில் ரூ.1,50,000 த்தையும், ATM கார்டு மோசடியில் ஒரு நபர் ரூ.4099 இழந்ததில் ரூ.4099-ம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஒரு நபர் ரூ.86,000 இழந்ததில் ரூ.20,000-யும், ஓ.டி.பி மோசடியில் ஒரு நபர் ரூ.42,469 இழந்ததில் ரூ. 9988யும் என இழந்த தொகை ரூ.1,84,087-த்தை மீட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. மணி மற்றும் டி.எஸ்.பி .கணேசன் ஆகியோர் முன்னிலையில் சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணையும், சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!