Perambalur: Deer killed after being hit by an unidentified vehicle!
பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத மோதியதில் சாலையை கடக்க முயன்ற மான் பரிதாபமாக உயிரிழந்தது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை வனப்பகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. நேற்றிரவு தண்ணீர், இரையை தேடி வந்த இரண்டரை வயது உள்ள புள்ளி மான் ஒன்று சாலையை கடக்க முயன்று உள்ளது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் இறந்த மானின் உடலை கைப்பற்றி கொளக்காநத்தம் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அதை சிறுவாச்சூர் காப்பு காட்டில் புதைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மான்கள் தண்ணீர் தேடி வரும் போது அடிக்கடி இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மான்கள் இனம் அழியநேரிடும்.