Perambalur : Degree program with placement in HCL for Adi Dravida, Tribals; Collector Information!
தாட்கோ மூலமாக 2022 – 2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு HCL Techbee “Early Career Programme” மூலமாக சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியினை துவங்க HCL Technologies -ல் ஒரு வருடகால பயிற்சி அளித்து நிரந்தர வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைகழகத்தில் BCA/ BBA / B.Com மற்றும் நாக்பூரிலுள்ள IIM பல்கலைகழகத்தில் Integrated Management பட்டபடிப்புகளில் சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும் எனவும், இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த மாணவ/மாணவிகளாக இருக்க வேண்டும்.
பன்னிரெண்டாம் வகுப்பில் 2022-23 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், HCL மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் ஒரு வருட பயிற்சிக்கான செலவீனம் தாட்கோ ஏற்கும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.17,000/- முதல் ரூ.22,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கு ஏற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தையோ அணுகி கூடுதல் விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.