Perambalur: Demonstration condemning the central government for shortening the labor law packages!
தொழிலாளர் சட்ட தொகுப்புகளை சுருக்கி இயற்றிய மத்திய அரசை கண்டித்தும் ,காஞ்சிபுரம் மாவட்டம் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சங்கம் வைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமையை பாதுகாக்க கோரி மின் ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக இன்று காலை, பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். அகஸ்டின் தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கருணாநிதி கண்டன உரையாற்றினர். கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ், செந்தில், தினேஷ் முன்னிலை வகித்தனர்கள் . கலையரசன், இளையபெருமாள், பெஞ்சமின், அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.