Perambalur: Devices that can operate electric motors using cell phones at subsidized prices; Collector’s information!
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்ப்செட்களை வீட்டில் இருந்தபடியேயும், தொலைவில் இருந்தும் மற்றும் எங்கிருந்து வேண்டுமானாலும் கைப்பேசி மூலம் இயக்கும் கருவிகளை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இரவு நேரங்களில் மோட்டாரை இயக்கிட வயல்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். மோட்டார் பம்ப்செட் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் இயங்க வேண்டும் எப்பொழுது இயங்கி எப்பொழுது நிற்க வேண்டும் என்பதற்கு டைமர் வசதி உள்ளது. தண்ணீரின்றி ஓடும்பொழுது தானாகவே நின்றுவிடும் வசதிகளும் உள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2024 -25 ஆம் ஆண்டில் தொலைதூர மின்மோட்டார் இயக்கிகள் வழங்கும் திட்டப்பணிக்கு 87 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பொது பிரிவில் 77 விவசாயிகளுக்கும், பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவில் 10 விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
பெரு விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவிகிதம் அல்லது ரூ.5,000/- மானியமும், சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள், பட்டியலின மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் அல்லது ரூ.7,000/- இதில் குறைவோ அவை மானியமாக வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அவ்விண்ணப்பங்களை வட்டார அளவில் செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கமையங்களில் பணிபுரியும் வேளாண்மைப் பொறியியல் துறை உதவி பொறியாளர்களிடம் சமர்ப்பிக்கலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர், தண்ணீர்பந்தல், ரோவர் கல்லூரி பின்புறம் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 98424 70358, 99448 50423 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம். என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.