Perambalur: District administration must reclaim government land encroached upon by Ramakrishna Educational Institution; resolution passed at VCK meeting.

பெரம்பலூர் ஒன்றிய விசிக செயற்குழு கூட்டம், ஒன்றிய செயலாளர்கள் செந்தில் வளவன் (மேற்கு) மாஸ்.மணி (கிழக்கு) ஆகியோர் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.

முன்னதாக, மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேருக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம், வெற்றியழகன், அய்யாக்கண்ணு, கேட்.மணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தழுதாழை பாலு, காட்டு ராஜா, ஸ்டாலின் லால், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஒன்றிய செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயலாளர் வீர. செங்கோலன், முன்னாள் மண்டல செயலாளர் கிட்டு, மாநில செயலாளர் (கருத்தியல் பரப்பு) ம.க.ச.இரத்தினவேல், மேனாள் மாவட்ட அமைப்பாளர் பொன்.பாவாணன், மாநில துணைச் செயலாளர் (மு.மா.க) அம்பேத் கோகுல், பேராசிரியர் தமிழ் குமரன், மாநில துணைச் செயலாளர்கள் (வழக்கறிஞர் அணி) மணிமாறன், எஸ்பி.வெங்கடேசன், மாநில துணைச் செயலாளர் (க.பொ.வி.இ) அண்ணாதுரை மாநில துணைச் செயலாளர் (வணிகர் அணி) 4 ரோடு நடராஜன் மற்றும் பெரம்பலூர் நகர (மேற்கு) செயலாளர் தங்க.இளவரசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில், கடந்த ஆட்சிக்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஏரி, அணைக்கட்டுகளை புனரமைக்க சுமார் 8.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால், முறையாக பணி செய்யாமல் அரசு பணத்தை கையாடல் செய்த செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் எளம்பலூர் உப்போடையில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா உயர் நிலை பள்ளி சுற்று சுவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதை, மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் நகரில் வடக்கு மாதவி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல் பட்டு வரும் கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும், கிரஷர்கள் மூலம் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மாதவி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பெரம்பலூரில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை தூர் வாரியும், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து கோயில்களிலும் ஆதிதிராவிட சமூக மக்கள் வழிபடுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சி.மா.ரவி, மதியழகன், வசந்த குமார், அஜீத், ராஜேந்திரன், சோழன், பிரவீன், ரமேஷ், ஜெகதீசன், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் எம்பி.மனோகரன், பாஸ்கர், ஒன்றிய பொறுப்பாளர்கள் மனோகரன், பால்நிலவன், மாவட்ட அமைப்பாளர்கள் பிச்சைப்பிள்ளை, காமராஜ், தமிழ்ச்செல்வன், கோவிந்தராஜ்,பாலன், வினோதன்ராஃபா, சுவான் ராஜ், மாரிமுத்து, மகளிர் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் சத்திய கலா, வீர லெட்சுமி, திலகவதி, சுஜிதா, வான்மதி. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கிளை செயலாளர்கள், மகளிர் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாக்கிய வர்ணன் நன்றியுரை ஆற்றினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!