Perambalur: Training session for lawyers on juvenile justice!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஏ.சரண்யா மற்றும் குன்னம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான ரா.ராஜசேகரன் தலைமையில், இளைஞர் நீதி குறித்த பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் நீதித்துறை நடுவர் ரா.ராஜசேகரன் பேசியதாவது: இளைஞர் நீதி என்பது 18 வயதிற்கு உட்பட்ட குழந்தை குற்றச் செயலில் ஈடுபட்டால் அக்குழந்தையை கையகப்படுத்துவதற்கு முன் அதை முதலில் நன்னடத்தை அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பிறகு, அக்குழந்தையின் பெற்றோருக்கோ அல்லது பாதுகாவலருக்கோ தகவல் தெரிவித்தல் வேண்டும் என்றும், குற்றச்செயலில் ஈடுபட்ட குழந்தை சட்டத்துடன் முரண்பட்ட குழந்தை என குற்றம் நிரூபிக்கப்பட்டால் அது சிறிய குற்றமாக இருந்தால் அக்குற்றத்திற்கு சமுதாய சேவை செய்ய ஒரு அனாதை இல்லத்திற்கோ, மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கோ, போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ அனுப்பலாம் என்றும், கொடுங்குற்றமாக இருந்தால் அக்குற்றத்திற்கு ப்ளேஸ் ஆப் சேப்டிக்கு அனுப்பலாம் என்றும், அங்கு அவர்களின் எதிர்கால வாழ்வின் நலன் கருதி அவர்களுக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை நல்வழிப்படுத்துவார்கள் என்றும், இளைஞர் நீதி என்பது குற்றச் செயலில் ஈடுபட்ட குழந்தையை தண்டிக்காமல் அவருக்கு ஆலோசணைகள் வழங்கி, மன்னித்து, மக்களோடு மக்களாக வாழ வைப்பதே ஆகும் என பேசினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497