Perambalur district, all preparations are ready to face the storm and rain: Official information!
பெரம்பலூர் மாவட்டத்தில் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான லக்ஷ்மி தலைமையில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெய்த தொடர் மழையால் பாதிப்பு அடைந்த பகுதிகள் குறித்து கேட்டறிந்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பின்னர், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நீர்வளத்துறை மூலம் பராமரிக்கப்படும் நீர் வரத்து வாய்க்கால், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நிவாரண உதவிகளும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், வெள்ள நிவாரண மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள், தீயணைப்பு மீட்பு குழுவினர்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு போதிய மருத்துவ முகாம்களை நடத்திடவும், புயல் மழை பகுதிகளில் பணியாற்றிடும் வகையில் மருத்துவக் குழுக்களும், மருத்துவர்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
மழையில் பாதிப்படையும் வீடுகள், கால்நடைகளுக்கு நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கிட தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும், போதிய மணல் மூட்டைகள், சவுக்கு குச்சிகள், மரக்களிகள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பருவமழை எதிர்கொள்ள 10 ஜெனரேட்டர்களும், 66 ஜே.சி.பி யும், 5 பொக்லைன்களும் மற்றும் 23 மரம் அறுக்கும் இயந்திரமும், 4,000 மணல் மூட்டைகளும், 1,305 சவுக்குக் கம்புகளும், 13,000 காலி சாக்கு பைகளும், 12 பவர் பம்புகளும், 48 அவசர கால மின்சார்ஜ் லைட்டுகளும், 0ஷ4 படகுகளும், 31 அவசர கால ஊர்தியும் (ஆம்புலன்ஸ்), மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகளை பிடிப்பதற்கு 10 பாம்பு பிடி வீரர்களும், மழை சேதங்களை மேற்கொள்வதற்கு பேரிடர் மீட்புக் குழுவினருடன் தன்னார்வலர் குழுக்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும், இயந்திரங்களை இயக்கிப் பார்த்து டீசல், பெட்ரோல் போதிய அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையினை 1077 மற்றும் 1800 4254 556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப் மூலமாகவும் 82201 65405 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லக்ஷ்மி தெரிவித்தார்.
அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.