Perambalur Collector presented certificates and incentives in appreciation of the talent of the artists!

கலை பண்பாட்டு துறையின் சார்பில், மாவட்ட கலை மன்றத்தின் மூலம் கலைஞர்களின் கலைதிறமையினை பாராட்டி 2018-19ஆம் ஆண்டிற்கான கலைமுதுமணி விருது தமுறு மேள கலைஞர் எஸ்.ஆறுமுகத்திற்கு பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத் தொகையாக ரூ.20 ஆயிரமும், கலைநன்மணி விருது நாடகக் கலைஞர் ரா. ராஜேந்திரனுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரமும், கலைசுடர்மணி விருது பரதநாட்டிய கலைஞர் தி. மணிகண்டனுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரமும், கலை சுடர்மணி விருது கரகாட்டக் கலைஞர் மு. செல்லதுரைக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரமும், கலை இளமணி விருது சிலம்பம் வீரர் சி. சிபிக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.4 ஆயிரமும் வழங்கி கலைஞர்களின் கலைத் திறமைகளை பாராட்டி கலெக்டர் வெங்கடபிரியா கவுரவித்தார்.









kaalaimalar2@gmail.com |
9003770497