Perambalur: District DMK executive committee meeting; to be held tomorrow! District in-charge V. Jagatheesan statement

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையிலும், கே.என். அருண் நேரு. எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் – பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன்,

குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோரது முன்னிலையில் , நாளை, மாலை 4.00 மணிக்கு, பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும், கூட்டத்தில்,

“ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்””

மார்ச்,9 அன்று நடக்கும் திருச்சி மாநில மாநாடு, மகளிர் படை பிரச்சார பயணம், 2026- சட்டமன்ற தேர்தல் பணி மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!