Perambalur district farmers allowed to take soil free from water bodies: Perambalur Collector Information!தமிழக அரசின் 2021-2022-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்ட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகளில் வண்டல் மண் / களிமண் / கிராவல் மண் உள்ள 263 நீர்நிலைகளின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு கனிம விதிகளின்படி விவசாயிகள், பொதுமக்களின் சொந்த உபயோகத்திற்காக மட்டும், நஞ்சை நிலம் எனில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள், புஞ்சை நிலம் எனில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகள், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகள் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் பணிக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் என்ற அளவில் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட மண் பரிசோதனை கூடம் / கல்வி நிறுவன ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட மண் பரிசோதனை அறிக்கையுடன் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர். என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!