Perambalur: District Government Music School is taking admissions; Collector Info!
பெரம்பலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் இசைப்பள்ளி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 26 ஆண்டு காலமாக சிறந்த ஆசிரியர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம்,வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாதசுரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேர்ந்து பயில தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதுமானது. இதர பாட பிரிவுகளில் சேருவதற்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இப்பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவ-மாணவியருக்கு தனித்தனியே அரசு விடுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ரூ.400/- வழங்கப்படுகிறது. அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை பெறலாம். மேலும் பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ350/- ஆகும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி செயல்படும்.
இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண் 1, புதிய மதனகோபாலபுரம் , நான்காவது குறுக்குத்தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04328-275466 என்ற தொலைபேசி எண் மற்றும் 9443377570 கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.