Perambalur District Hotels Association New Executive Induction Ceremony
பெரம்பலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்க (ஹோட்டல் – டீக்கடை, பேக்கரி – ஸ்வீட்ஸ் – லாட்ஜ்) புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா புதிய பெரம்பலூர் மாவட்ட தலைவர் கீதா ரெஸ்டாரண்ட் ஆர்.சிவகுமார் தலைமையில் நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ப.நீலராஜ், அஸ்வின்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர், உடையார் டீ ஸ்டால், பி.முத்துக்குமார் வரவேற்றார். கலெக்டர் க.கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ச.ஷ்யாம்ளா தேவி, நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக நிறுவனர் அ.சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாநில தலைவர் வெங்கட சுப்பு புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.
மாநில செயலாளர் சீனிவாசன்,மாநில துணைத் தலைவர்கள் ரெங்கநாதன், குப்புசாமி, மாநில இணைச் செயலாளர்கள் கண்ணன், சண்முக பழனியப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் சண்முகநாதன், திருச்சி மாவட்ட ஓட்டல்கள் சங்க செயலாளர் சுந்தரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நீல்ராஜ், அஸ்வின்ஸ் கணேசன் ஆகியோர் மாவட்ட கவுரவ தலைவர்களாகவும்,
மாவட்ட தலைவராக ஆர் சிவகுமார், மாவட்ட செயலாளராக பி. முத்துக்குமார், மாவட்ட பொருளாளராக வீ.காசிவிஸ்வநாதனும், தம்பு காபி பார் & ரெஸ்டாரண்ட் ஆர்.பாலாஜி, ஆரியாஸ் ஹோட்டல் ஹோட்டல் டி. ராமசுப்பு, பனானா லீப் ஆர்.மனோகர், மாரீஸ் மாணிக்கம், ராஜராஜேஸ்வரி ஸ்வீட்ஸ் வேலாயுதம், கோபி பேக்கரி கோபிநாத், ஏகேஎன் அசோகன் ஆகியோர் மாவட்ட கவுரவ ஆலோசகர்களாகவும்,
பெரம்பலூர் நகர தலைவராக ஊட்டி காபி பார் என் செல்லப் பிள்ளை, நகர செயலாளராக சாந்தி ரெஸ்டாரன்ட் ஆர் செல்வராஜ், நகர பொருளாளராக ஆர்.மல்ல பிள்ளையும், மாவட்ட இணை செயலாளராக கொங்கு ஐஸ் கிரீம் சிவக்குமாரும், வள்ளலார் அரவிந்தன் கல்யாணி மெஸ் சுந்தரம், ஹோட்டல் சரவண பவன் அருண்குமார், ஹோட்டல் குரு மோகன்ராஜ் ஆகியோர் மாவட்டத் துணைத் தலைவர்களாகவும், கீதம் வீட்டு சமையல் விஷ்ணு ரோகன், ஆர் ஆர் கேண்டீன் செல்வராஜ், சரஸ்வதி பேக்கிரி ராஜேஷ் ஆகியோர் மாவட்ட துணை செயலாளர்களாகவும், வசுந்தரா பழமுதிர்சோலை ஜெய் பிரகாஷ், கொளஞ்சி ரெஸ்டாரண்ட் கொளஞ்சி வேல், ராஜேந்திரன் ஹோட்டல் ராஜேந்திரன், அம்மா மெஸ் பழனியாண்டி ஆகியோர் நகர துணை தலைவர்களாகவும், டீ ஸ்டால் அழகுதுரை நகர் இணைச் செயலாளராகவும், பகவதி லாட்ஜ் கணேசன், பேக்கரி கமல் பாஷா ஆகியோர் நகர துணை செயலாளர்களாகவும், வக்கீல் வேல்முருகன் சட்ட ஆலோசராகவும், உள்ளிட்ட பலர் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட பொருளாளர் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.