Perambalur district is the first district in Tamil Nadu to have milk producers cooperative societies in all the villages!

பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் 152 வருவாய் கிராமங்கள் உள்ளது. இதில் 151 வருவாய் கிராமங்களிலும் மொத்தம் 190 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இதில் கொளக்காநத்தம் வருவாய் கிராமத்தில் மட்டும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இல்லாமல் இருந்தது.

தற்போது, கொளக்காநத்தம் வருவாய் கிராமத்திலும் 191 வது பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆணை சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இதன் மூலம் தமிழ்நாட்டில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டுள்ள முதல் மாவட்டம் என்ற பெருமையினை பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.2.14 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, திருச்சி ஒன்றியம் ஆவின் நிறுவனத்திற்கு 1.95 லட்சம் லிட்டர் பாலும், 19,000 லிட்டர் பால் உள்ளூர் மக்களின் தேவைகளுக்கும் வழங்கப்படுகின்றது. சுமார் 18,462 விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!