Perambalur: District-level youth festival competitions organized by Nehru Yuvakendra, announced by the Collector!
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா 05.12.2024 அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெறுகிறது.
நேரு யுவகேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் வெகு சிறப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் இவ்விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் அறிவியல் கண்காட்சி. தனிநபர் போட்டி (முதல் பரிசு ரூ. 3,000, 2-ஆம் பரிசு ரூ. 2,000, 3-ஆம் பரிசு ரூ.1,500), அறிவியல் கண்காட்சி. குழுப் போட்டி (முதல் பரிசு ரூ. 7,000, 2-ஆம் பரிசு ரூ. 5,000, 3-ஆம் ரூ.பரிசு 3,000மும் வழங்கப்படும்.
இளம் எழுத்தாளர் போட்டி – கவிதை, இளம் கலைஞர் போட்டி – ஓவியம், கைப்பேசி புகைப்பட போட்டி ஆகிய போட்டிகளுக்கு (முதல் பரிசு ரூ. 5,000, 2-ஆம் பரிசு ரூ. 2,500, 3-ஆம் பரிசு ரூ.1,500, கலைத்திருவிழா – குழு நடனப்போட்டி (முதல் பரிசு ரூ. 7,000, 2-ஆம் பரிசு ரூ. 5,000, 3-ஆம் பரிசு 3,000, ஆகிய போட்டிகள் நடைப்பெற உள்ளன.
இப் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிகள் – வயது 15 முதல் 29 வரை (அதாவது 01.09.2024 தேதியின் படி 15 வயது இருக்க வேண்டும்) போட்டியில் பங்கு பெறுபவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். கலைப்போட்டிகளுக்கு மாவட்ட அளவில் வெற்றி பெறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியடைவர். முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மாவட்ட அளவிலான முன்பதிவிற்கு dyc.perambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் 04.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போட்டி நடைபெறும் நாளன்று போட்டியாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட விபரத்துடன், தங்களுடைய ஆதார், பிறப்பு சான்றிதழ், பள்ளி, கல்லூரியை சார்ந்தவர்கள் பிறந்த தேதி குறிப்பிட்ட உறுதி சான்றிதழ் (Bonafide Certificate) பள்ளி தலைமையாசிரியர், கல்லுரி முதல்வர்களிடம் பெற்று சமர்பிக்கப்பட வேண்டும். இப்போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடையும். இந்த பொன்னான வாய்ப்பை பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.
மேலும் தகவலுக்கு நேரு யுவகேந்திரா அலுவலகம், எளம்பலூர் ரோடு, நேரு வீதி, (ராஜா சினிமா தியேட்டர் எதிரில்) பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 78109 82528, 04328-296213, 94437 07581 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.