Perambalur: District Police, Legal Adviser Vacancy Notification!
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு, சட்ட ஆலோசகர் (Legal Adviser) பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்றும், விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு இளங்கலை சட்டம் (B.L) படிப்பினை முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான L.L.M, BA. L.L.B, {HONS} B.COM+L.L.B, BCA+L.L.B BBA L.L.B {HONS}, ஆகிய படிப்பில் ஏதேனும் ஒன்றினை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் குறைந்தது 5 வருடங்கள் வழக்குரைஞராக பணிபுரிந்து இருப்பதோடு, எவ்வித குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது.
இப்பதவிக்கு ஒரு வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அவ்வொருவருட ஒப்பந்தகாலமானது விண்ணப்பதாரரின் செயல் திறன் அடிப்படையிலேயே அமையும் விண்ணப்பதாரரின் பணி திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் விண்ணப்பதாரரின் ஒப்பந்த காலம் முடிவடையும் முன்பே எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் கோரப்படும் சட்ட ரீதியான கருத்து /கருத்துரை மற்றும் அனைத்து வகையான சட்ட நிகழ்வுகளுக்கும் சட்ட கருத்துரை வழங்க வேண்டும். தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 26 ஆயிரம் மட்டும் வழங்கப்படும். இப்பணியானது தற்காலிகமானது மட்டுமே ஆகையால் இவற்றில் பதவி பணி நிரந்தரம் கோர இயலாது. விண்ணப்பங்கள் தரவேண்டிய கடைசி நாள் 13.09.2024 என்றும், எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
விருப்பமுள்ள நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களது விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.