Perambalur District: Public demand to appoint full-time Executive Officer for Town Panchyat!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சியில் முழுநேர செயல் அலுவலர் இல்லாததால், பொதுமக்கள் நேரில் சந்திக்க முடியாமல் கடும் அவதிபட்டு வருகின்றனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் செய்ய வேண்டிய, பொது சுகாதார பணிகள், துப்புரவு பணிகள், கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை, மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு குடிநீர் வழங்கல், விளக்குவசதி, கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்கு செய்தல், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல், பிறப்பு / இறப்பு பதிவு, மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல் போன்ற பணிகளுக்காக பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

மேலும், தற்போது புதிதாக பணிக்கு வந்துள்ள செயல்அலுவலர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவரை எவ்விதத்திலும், குறை சொல்ல முடியாது. அவர் இன்னும் பயிற்சி முடிக்க வில்லை எனவும், அவர் பேருகால விடுப்பு எடுத்துக் கொண்டால், சுமார் 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை அவர் பணிக்கு திரும்புவது சிரமமாக இருக்கும்.

அரசு விதிப்படி அவர் நடந்து கொண்டாலும், குரும்பலூருக்கு பொறுப்பு செயல்அலுவலரே நியமனம் செய்யப்பட உள்ளதாலும், அவரும், அரும்பாவூரில் இருந்து வந்தால், குரும்பலூர் பணிகளும் முழுமை பெறாது, அரும்பாவூர் பணிகளும் நிறைவு பெறாது. மேலும், இரண்டு ஊர்களுக்கும் இடையே சுமார் 30 கி.மீ தொலைவு உள்ளது. எனவே, புதிய செயல் அலுவலர் பணிக்கு திரும்பும் வரை முழுநேர செயல் அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!