Perambalur District Readers’ Circle Meeting!
பெரம்பலூர் மாவட்ட வாசகர் வட்டத்தின் மாதாந்திர கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மக்களுக்கான மருத்துவ கழக மாநில செயலாளர் சி. கருணாகரன் பன்னாட்டுச் செய்திகள் என்ற தலைப்பிலும்,
சமூக செயற்பாட்டாளர் அன்வர் உசேன், உக்ரைன் போர் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும்,
திருச்சி புறநகர் சிஐடியு மாவட்ட செயலாளர் கே. சிவராஜன் முற்றும் இலங்கையின் நெருக்கடி ஓர் பகுப்பாய்வு என்ற தலைப்பிலும்,
அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆ.ராமர் செய்தி பகுப்பாய்வு என்ற தலைப்பிலும்,
அரியலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் ப. செல்வகுமார் தேசியச்செய்திகள் என்ற தலைப்பிலும் பேசினர்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, ஒன்றிய செயலாளர் கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராஜன், முதுகலை ஆசிரியர் சிலம்பரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் அமைப்பாளர் வழக்கறிஞர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.