Perambalur: Diwali; Collector launches scheme to provide free Dhoti Sarees to senior citizens!

முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், பொங்கல் 2025 வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டங்களை செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பெரம்பலூர் வட்டத்தில் 81 நியாய விலை கடைகளில் 8,865 பெண் பயனாளிகளும், 4,010 ஆண் பயனாளிகளும், வேப்பந்தட்டை வட்டத்தில் 76 நியாய விலை கடைகளில் 7,208 பெண் பயனாளிகளும், 2,835 ஆண் பயனாளிகளும், ஆலத்தூர் வட்டத்தில் 36 நியாய விலை கடைகளில் 3,989 பெண் பயனாளிகளும், 1,782 ஆண் பயனாளிகளும், குன்னம் வட்டத்தில் 89 நியாய விலை கடைகளில் 8,763 பெண் பயனாளிகளும், 4,713 ஆண் பயனாளிகளும் என பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 282 நியாய விலை கடைகளின் மூலம் 28,825 பெண் பயனாளிகளும், 13,340 ஆண் பயனாளிகளும் ஆக மொத்தம் 42,165 முதியோர் ஓய்வூதிய பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.

இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால் கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, பெரம்பலூர் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!