Perambalur: DMK Coral Festival; District DMK in-charge Jagatheesan calls to the party!
தி.மு.க.பவள விழாவை முன்னிட்டு 28.09.2024, சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் தி.மு.க. கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். அது சமயம், இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.